Sports
உலகக்கோப்பை IND vs PAK போட்டி : உலக Record செய்து Hotstar-ஐயே அதிரவைத்த பார்வையாளர்கள் !
இந்தியாவில் 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டித்தொடரில், நேற்றைய முன்தினம் (14.10.2023) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் போட்டியிட்டன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் அமைந்திருக்கும் 'நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்' நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 191 ரன்கள் எடுத்தது. இதனால் 192 ரன்கள் வெற்றி இலக்கை குறி வைத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய வீரர்களின் ஆட்டத்தால், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையில் 8 ஆவது முறையாக வென்றது.
பாகிஸ்தானுடன் மோதி, இந்தியா வென்றதற்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த போட்டியால் ஹாட்ஸ்டார் தளத்தில் போட்டி நடைபெற்ற நாளில் 3.5 கோடி ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளதாக ஹாட்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது இந்தியா முழுவதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த இந்த போட்டித்தொடரை பலரும் ஆர்வத்துடன் பார்த்து வந்தனர். சிலர் நேரில் கண்டுகளித்தாலும், பலரும் இந்த போட்டியை ஆன்லைனில் கண்டு ரசித்தனர்.
அந்த வகையில் உலகக்கோப்பை போட்டி ஒளிபரப்பு செய்யக்கூடிய ஹாட்ஸ்டார் தளத்தில் ரசிகர்கள் லைவாக இந்த போட்டியை பார்த்துள்ளனர். அப்படி பார்க்கப்பட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை 3.5 கோடி என ஹாட்ஸ்டார் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் இது ஒரு உலக சாதனை என நெகிழ்ச்சியாகவும் பதிவிட்டுள்ளது.
முன்னதாக கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஆசிய கோப்பை 2023, இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஹாட்ஸ்டார் தளத்தில் 2.8 கோடி பார்வையாளர்கள் கண்டுள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையேயான T20 போட்டியை 1.8 கோடி பார்வையாளர்கள் கண்டுள்ளனர். 2019-ல் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டியை 2.52 பார்வையாளர்கள் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!