Sports
ஆசிய விளையாட்டு போட்டி : 10-வது தங்கத்தை வென்று அசத்திய இந்தியா.. 207 பதக்கங்களுடன் முதலிடத்தில் சீனா !
ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.கடந்த 2018-ம் ஆண்டு 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்தது.அந்த வகையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் நடைபெற்று வருகிறது.
கடந்த செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கிய சீனாவின் ஹாங்சோ நகரில் தொடங்கிய இந்த போட்டிகள் வரும் அக்டோபர் எட்டாம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 48 வகையான விளையாட்டுகளில் 481 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவில் இருந்து 38 விளையாட்டுகளில் மொத்தம் 634 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த தொடரில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வீரர்கள் சீரான அளவில் பதக்கங்களை வென்று வந்தது. அதிலும், மகளிர் கிரிக்கெட், ஸ்குவாஷ், டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர்.
மேலும், துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர்கள் 6 தங்கம், 8 வெள்ளி , 5 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய அணி 10 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
அதே நேரம் 108 தங்கம் உள்ளிட்ட 207 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 28 தங்கம் என 103 பதக்கத்தோடு ஜப்பான் இரண்டாம் இடத்திலும், 27 தங்கம் உள்ளிட்ட 108 பதக்கங்களோடு தென் கொரியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
Also Read
-
ராணுவ அதிகாரி மீதான விமர்சனம்... பாஜக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் !
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!