Sports
பாலியல் வழக்கில் அதிரடி கைது.. இலங்கை வீரரை விடுவித்த ஆஸ்திரேலிய நீதிமன்றம்.. முழு விவரம் என்ன ?
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் மாதம் நடைபெற்றது. எனினும் இந்த தொடரில் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றில் தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது. அதன் பின்னர் இலங்கை அணி நாடு திருப்ப இருந்த நிலையில், பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவை ஆஸ்திரேலிய காவல்துறை அதிரடியாக கைது செய்தது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 29 வயது பெண்ணுடன் தனுஷ்கா டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகிய நிலையில், அவரை சிட்னியில் உள்ள குடியிருப்பில் தனுஷ்க குணதிலகா சந்தித்துள்ளார்.அப்போது அந்த பெண்ணை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் சிட்னி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் தனுஷ்க குணதிலகா நாடு திருப்பயிருந்தபோது கைது செய்யப்பட்டார். இது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்ந்து நடந்துவந்த நிலையில், ஆணுறை இன்றி அந்த பெண்ணை குணதிலகா உடலுறவு கொண்டதாக பெண்ணில் சார்பில் கூறப்பட்டது.
ஆனால், அந்த பெண்ணால் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு முற்றிலும் போலியானது என தனுஷ்க குணதிலக்க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். சுமார் ஒரு ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துவந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான தீர்ப்பில், அந்த பெண்ணின் அழைப்பை அடுத்து தனுஷ்க குணதிலக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் என்றும், தனுஷ்க குணதிலக்க குற்றம் புரிந்ததாக பெண்ணின் தரப்பில் நிரூபிக்கமுடியவில்லை என கூறி இந்த வழக்கில் இருந்து நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !