Sports
ஆசிய விளையாட்டுப போட்டி.. கிரிக்கெட்டில் பதக்கத்தை உறுதிசெய்தது இந்திய மகளிர் அணி.. தங்கம் வெல்லுமா ?
ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.கடந்த 2018-ம் ஆண்டு 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்தது.அந்த வகையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் நேற்று தொடங்கிய நிலையில், வரும் அக்டோபர் எட்டாம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது.
பொதுவாக ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் இடம்பெறாத நிலையில், இந்த தொடரில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்திய அணிக்கு பதக்கம் கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது.
இந்த நிலையில், இந்த தொடரில் பங்கேற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தனது பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி நேரடியாக காலிறுதியில் மலேசிய அணியை சந்தித்தது. அது மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், தரவரிசையில் முன்னிலையில் இருந்ததால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
அதன் படி இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 51 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 8.2 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் குறைந்த பட்சம் வெள்ளிப்பதக்கத்தை உறுதிசெய்துள்ளது. மற்றொரு அரையிறுதி ப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், அதில் வெற்றிபெற்றால் இந்திய அணி தங்கப்பதக்கத்தை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!
-
“ஈராயிரம் ஆண்டுகால சண்டை இது! இதில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!