Sports
விக்கெட் எடுக்கவில்லை என்றால் வெறுப்படைவது ஏன்? - ஷாகின் அப்ரிடியை விமர்சித்த மாமனார் ஷாகித் அப்ரிடி !
ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய துவக்க வீரர்கள் கில், மற்றும் ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தை வழங்கினர்.ரோஹித் சர்மா 56 ரன்களுக்கும், கில் 58 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் அரைசதம் கடந்த பின்னர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஓய்வுக்கு பின்னர் சுமார் 3 மாதத்துக்கு பிறகு களத்துக்கு திரும்பிய கே.ராகுல் இந்த போட்டியில் சதமடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே கோலியும் ஒருநாள் போட்டியில் தனது 47-வது சதத்தை கடந்தார்.
இவர்களின் இந்த அதிரடி காரணமாக இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. இறுதிவரை களத்தில் இருந்த விராட் கோலி 94 பந்துகளில் 122 ரன்களும், கே.எல்.ராகுல் 106 பந்துகளில் 111 ரன்களும் குவித்தனர்.பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சு கூட்டணியான ஷகீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராவுப் ஆகியோரின் பந்துவீச்சை இந்திய வீரர்கள் எதிர்கொண்ட விதம் பாராட்டைப் பெற்றுள்ளது. அதே நேரம் இந்த தோல்வியைக் குறிப்பிட்டு பாகிஸ்தான் வீரர்களை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த போட்டியில் மோசமாக செயல்பட்ட ஷாகின் ஷா அப்ரிடியை அவரது மாமனாரும், முன்னாள் பாகிஸ்தான் வீரருமான ஷாகித் அப்ரிடி விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், ” நஷீம் ஷா ஆரம்பித்தது போல ஷகீன் அப்ரிடி ஆரம்பித்து இருந்தால் இந்திய அணியை கவலைக்குள்ளாக்கியிருக்கலாம். ஆனால், ஷகீன் சரியான இடத்தில் பந்தை வீசாமல், அவரது பந்துவீச்சை இந்திய வீரர்கள் தாக்கியதும் லைன் மற்றும் லென்த்தில் தவறு செய்தார்.
ஆரம்பத்திலேயே விக்கெட் வீழ்த்தும் அளவுக்கு அவருடைய புகழ் இருப்பதால், ஆரம்ப ஓவர்களில் ஷாகின் விக்கெட் எடுக்கவில்லை என்றால் வெறுப்படைகிறார். இரண்டு ஓவர்கள் சரியாக வீசவில்லை என்றால் கோவப்பட ஏதும் இல்லை. நீங்கள் சரியான பகுதியில் பந்தை வீசினால், நீங்கள் விக்கெட் எடுப்பதற்கும் புதிய பந்தில் சிறப்பாக செயல்படுவதற்கும் வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!