Sports
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரால் ஆசிய அணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்.. என்ன செய்யப்போகிறது BCCI ?
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
இந்நிலையில் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தற்போது இதில் ஒரு சிக்கலும் எழுந்துள்ளது.
ஏனெனில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் வருகின்ற செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்திய அணி கலந்துகொண்டால் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பும் இந்திய அணிக்கு உள்ளது.
இதனால் இதில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் ,அந்த நாட்களில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால் அதில் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இரண்டாம் தர கிரிக்கெட் அணியை அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மகளிர் அணி கண்டிப்பாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் என்றும், ஆடவர் அணியை அனுப்புவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் பிசிசிஐ அதிகாரி ஒருவரால் சொல்லப்பட்டுள்ளது. 2010, 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற்ற நிலையில், அதற்கு இந்திய கிரிக்கெட் அணி அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்