Sports
”உன்னை விட்டு என்னால் இருக்க முடியாது”.. தனது தவறுக்கு காதலியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நெய்மர்!
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீராக இருப்பவர் நெய்மர். இவருக்குப் பிரேசில் மட்டுமல்லாது உலக முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே இவரது காதல் விவகாரம் பேசு பொருளாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தனது காதலிக்கு மன்னிப்பு கேட்டு நெய்மர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிரம் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், ”உனக்காகவும், உனது குடும்பத்திற்காகவும் இதைச் செய்கிறேன். பிரச்சனையை இது தீர்க்குமா என்று எனக்குத் தெரியாது. இருந்தும் இது நமக்குத் தேவை. எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக நீ இருக்க வேண்டும்.
உங்களைப் பற்றி வெளிவந்த செய்திகள் எவ்வளவு காயங்களை ஏற்படுத்தி இருக்கும் என்று எனக்குத் தெரியும். எப்போது உங்களுக்கு ஆதரவாக நான் இருப்பேன். தினந்தோறும் நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். எனது தவறுகளை நண்பர்கள் மற்றும் உங்களால் மட்டுமே திருத்த முடியும்.
என்னுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்க வேண்டிய பெண் நீ. தற்போது கருவுற்று மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறாய். நான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. நெய்மருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்