Sports
"இவர்கள் 76 வயதானாலும் தோனியை ஓய்வு பெறவிடமாட்டார்கள்" -சென்னை ரசிகர்களை கண்டு வியந்த ஹர்ஷா போக்லே !
இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.
அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். பெரும்பாலும் இந்த தொடர்தான் அவரின் இறுதி ஐபிஎல் தொடராக இருக்கும் என கருதப்படுவதால் சென்னை அணி விளையாடும் இடங்களில் எல்லாம் தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
அதிலும் சேப்பாக்கத்தில் தோனி ஒரு இணையில்லா நாயகனாகவே கொண்டாடப்படுகிறார். அவர் பயிற்சி செய்ய பார்க்கவே பெரும் கூட்டம் சேப்பாக்கத்தில் கூடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை தோனியை சூப்பர்ஹீரோவாக பார்க்கிறது என வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், "சூப்பர்ஹீரோக்களைக் கொண்டாடித் தீர்க்கின்ற சென்னை தோனியையும் அப்படியொரு சூப்பர்ஹீரோவாகத்தான் பார்க்கிறது. அவர் 7,8வது இடத்தில்தான் களமிறங்குவார் என ரசிகர்களுக்கு தெரியும். ஆனாலும் அவரை எப்போதும் எதிர்பார்க்கிறார்கள் அவர் கிளவுஸ் மாட்டுவதை கேமரா காட்டினாலே அரங்கம் அதிர்கிறது. தோனிக்கு 75 வயது ஆனாலும், இந்த ரசிகர்கள் அவரை ஓய்வு பெற விடமாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!