Sports

இந்திய அணிக்கு உதயமாகிய அடுத்த பினிஷர்.. IPL 2023 கண்டெடுத்த நட்சத்திரம்.. யார் அந்த இளம் வீரர் ?

கடந்த ஏப்ரல் 8-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணி கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லாததால் குஜராத் அணியை ரஷித் கான் தலைமை தாங்கினார்.இந்த போட்டியில் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய அந்த அணி களமிறங்கியது.

அதன்படி களமிறங்கிய குஜராத் அணி விஜய் சங்கர் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரின் ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. பின்னர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் இறுதி கட்டத்தில் 4 ஓவருக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அடுத்த ஓவரை வீசிய கேப்டன் ரஷீத் கான் அதிரடி வீரர் ரசல், நரைன், ஷர்துல் தாகூரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி தொடரின் முதல் ஹாட் ட்ரிக் விக்கெட்டை பதிவு செய்தார்.இதில் இருந்து கொல்கத்தா அணி தோல்வியை தழுவுவது நிச்சயம் என்ற நிலை ஏற்பட்டது.

அதோடு இறுதி 8 பந்தில் அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், 19-வது ஓவரின் இறுதி இரண்டு பந்துகளில் 6,4 என ரிங்கு சிங் விளாசினார். இதனால் இறுதி ஓவரில் 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. யாஷ் தயாள் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை உமேஷ் யாதவ் 1 ரன் எடுக்க 5 பந்தில் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அடுத்த 5 பந்துகளில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் யாரும் நம்பமுடியாத இடத்தில இருந்து அணியை வெற்றிபெற வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரும் கவனம் பெற்ற ரிங்கு சிங்குவை பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.

அதன் பின்னர் ரிங்கு சிங் தற்போது வரை இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறார். கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கூட இறுதிப்பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டபோது 4 ரன்கள் அணியை வெற்றிபெற வைத்தார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் கூட முதலில் ஆடிய லக்னோ அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் ஆடிய கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் மொத்தமாக சொதப்ப, ஒரு பக்கத்தில் ரிங்கு சிங் மட்டுமே சிறப்பாக ஆடினார். இறுதி கட்டத்தில் அவர் 4,6 என விலாசியும் ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றியை தவறவிட்டது. ரிங்கு சிங் மட்டும் 33 பந்துகளில் 67 ரன்களைச் சேர்த்து ஜொலித்தார். இவரின் தொடர்ச்சியான இந்த ஆட்டத்தைத் தொடர்ந்து இந்திய அணியின் அடுத்த பினிஷராக ரிங்கு சிங் வலம் வருவார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read: அவரிடமிருந்து கற்றுக்கொண்டது என்ன ? - தோனியின் கேப்டன்ஷிப் குறித்து KL ராகுல் கூறியது என்ன ?