Sports
டெஸ்ட் சாம்பியன்ஷிப் : "இந்திய அணியில் அவர் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது" -பாண்டிங் கூறிய அந்த வீரர் யார் ?
டி20, டி10 என கிரிக்கெட் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. அப்பேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக இந்திய அணி முன்னேறியுள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் சாம்பியன் பட்டத்திற்காக முட்டி மோத போகின்றனர். கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்த இந்திய அணி இந்த முறையாவது அதனை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த முறை இந்திய அணி இங்கிலாந்து சென்றிருந்தபோது அங்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டிருந்தார். மேலும், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என அசத்தியிருந்தார். ஆனால் இந்த முறை இருவரும் காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வருத்தங்கள் இருந்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் அனுபவம் வாய்ந்த அஜின்கியா ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இந்த அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் இஷான் கிஷான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடும் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பெறாதது ஆச்சர்யமாக உள்ளது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், "கே.எல்.ராகுலுக்கு பதில் இந்திய அணியில் இஷான் கிஷன் இடம் பெற்றுள்ளது இந்திய அணிக்கு வலு சேர்க்கும். ரிஷப் பந்த் விளையாடுவது போன்றே இருக்கும் அவரின் அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும். ஆனால், சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பெறாதது ஆச்சர்யமாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
மார்ச் மாதத்தில் கேரளா வருகிறது மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி... உறுதி செய்து வந்த E-Mail !
-
பழனிசாமிக்கே தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை மீது சந்தேகம் இருக்கிறது - அம்பலப்படுத்திய முரசொலி !
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!