Sports
"தோல்விக்கு நான் செய்த இந்த தவறுதான் காரணம் " -கொல்கத்தா அணியுடனான போட்டிக்குபின் தோனி கூறியது என்ன ?
நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளளது. இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி அணி மட்டுமே தற்போதைய நிலையில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறிய நிலையில், மீதமுள்ள 9 அணிகளும் களத்தில் நிற்கின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான முக்கியமான லீக் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், சென்னை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகாமல் அப்படியே நீடிக்கிறது.
டெல்லி அணியுடனான கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல் 4 இடத்தில் சென்னைக்கான வாய்ப்பு உறுதிசெய்யப்படும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதே நேரம் அந்த போட்டியில் தோல்வியைத் தழுவினால் பிற அணிகளை சார்ந்து இருக்கும் நிலைக்கு சென்னை அணி தள்ளப்படும்.
இந்த நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி முடிந்தபின்னர் பேசிய தோனி நான் செய்த தவறால்தான் அணி தோல்வியைத் தழுவவேண்டியிருந்தது என கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "இது 180 ரன்களை எடுக்க வேண்டிய விக்கெட் இது. இந்த உண்மை முதல் பந்து போடும்போதே தெரிந்து விட்டது. அங்குதான் நான் தவறை செய்துவிட்டதாக உணர்ந்தேன். பந்துவீசும் போது பனியின் தாக்கம் பெரிதாக இருந்தது. மேலும், முதல் இன்னிங்ஸின் போது ஸ்பின்னர்களுக்கு பிட்ச் கொஞ்சம் அதிகமாகவே ஒத்துழைத்தது.
தோல்விக்கு பேட்ஸ்மேன்கள், பௌலர்கள் என யார் மீதும் பழி போட முடியாது. ஷிவம் துபே ரொம்பவே சிறப்பாக ஆடுகிறார். அவர் தன்னுடைய செயல்பாட்டில் எப்போதுமே திருப்திப்பட்டுக் கொண்டதில்லை. அதனாலயே தொடர்ந்து மெருகேறிக் கொண்டே இருக்கிறார். சஹார் பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். ஃபீல்டுக்கு ஏற்ற வகையில் பந்துவீசும் திறன் அவரிடம் அதிகமாகவே இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!