Sports
"அவரைப்போல நம் அணியில் யாரும் இல்லை, எப்படியாவது எடுத்துவிடுங்கள் " -CSK அணிக்கு அறிவுறுத்திய தோனி !
இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பின்னர் லக்னோ, மும்பை அணிகளை வீழ்த்தியது.
அதன்பின்னர் ராஜஸ்தான் அணியோடு அதிர்ச்சி தோல்வி அடைந்த சென்னை அணி அதன்பின்னர் பெங்களூரு, ஐதராபாத் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தியது. அதனைத் தொடர்ந்து கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய சென்னை அணி அதன்பின்னர் ராஜஸ்தான் அணியுடன் மீண்டும் தோல்வியைத் தழுவியது.
இந்த தொடரில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சென்னை அணி வீரர் அஜிங்கிய ரஹானே திகழ்ந்து வருகிறார். மும்பை அணிக்கு எதிரான 19 பந்துகளில் அதிரடி அரைசதம் அடித்த ரஹானே கொல்கத்தா அணிக்கு எதிராக 29 பந்துகளில் 71 ரன்கள் விளாசி ஆட்டநாகனாக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக இந்தியிற் அணியில் இருந்து நீக்கப்பட்ட ரஹானே நடந்துமுடிந்த சையது முஸ்தக் அலி டி20 தொடரில் 5 போட்டிகளில் கிட்டத்தட்ட 110 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். ஆனால் அதன்பின்னர் நடந்த ரஞ்சிக்கோப்பையில் 600 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினார். அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார்.
இந்த நிலையில், ரஹானேவை அணியில் எப்படியாவது எடுத்துவிடுமாறு தோனி கூறியதாக சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நான் ரஹானேவை ஏலத்தில் எடுப்பதற்கு முன்பாக தோனியிடம் விவாதித்தேன். அதற்கு ரஹானேவை போன்ற ஒருவர் நம்மிடம் இல்லை, அவர் கிடைத்தால் எப்படியாவது எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அவர் சரியான பார்மில் இல்லை என்பதால் எவரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. ஆகையால் நாங்கள் கேட்ட ஆரம்ப விலைக்கு அவர் கிடைத்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!