Sports
#HBDSACHIN : சிட்னி கிரிக்கெட் மைதான வாயிலுக்கு சச்சினின் பெயர்.. கிரிக்கெட் ஜாம்பவானுக்கு கெளரவம் !
இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றவர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர்தான். 16 வயதில் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் அதன் பின்னர் செய்தது எல்லாம் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டியது.
அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக போட்டிகள் என கிரிக்கெட்டின் பல்வேறு சாதனைகளுக்கு அவரே சொந்தக்காரர். அதோடு ஒரு நாள் போட்டியில் 200 அடிக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், முதல் ஆளாக அதை கடந்து அனைத்தும் முடியும் என்று நிரூபித்தார்.
அப்படி பட்ட சாதனைகளை கொண்ட சச்சின் டெண்டுல்கர் தனது 47 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட்டுக்கு உலகளவில் பல பெருமைகளைத் தேடித் தந்துள்ள சச்சினுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாராவை சிட்னி கிரிக்கெட் மைதானம் கவுரவித்துள்ளது. அதன்படி சிட்னி மைதானத்தின் வாயிலுக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாராவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வாயிலை கடந்தே வீரர்கள் மைதானத்துக்குள் வரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள சச்சின் அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 241 ரன்கள் எடுத்துள்ளார். இந்த மைதானத்தில் சச்சினின் பேட்டிங் சராசரி 157 ஆகும். அதோடு இந்தியாவுக்கு வெளியே சிட்னி கிரிக்கெட் மைதானம் எனக்கு ரொம்பவே பிடித்த ஒன்று என்று சச்சின் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”பாஜகவின் ஊதுகுழலாக உள்ள பழனிசாமியை 2026ல் மக்கள் அடித்து விரட்டுவார்கள்” : அமைச்சர் ராஜேந்திரன் உறுதி!
-
மருத்துவ படிப்பில் சேர 72,743 பேர் விண்ணப்பம் : கலந்தாய்வு எப்போது?
-
”அமித்ஷாவின் மிரட்டலுக்கு பயந்து கிடக்கும் எடப்பாடி பயனிசாமி” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?