Sports

FIFA தரவரிசையில் 6 ஆண்டுகளுக்கு பின் முதலிடம்.. உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினாவுக்கு மற்றொரு மகுடம் !

அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

முதல் 70 நிமிடம் ஆடுவது பிரான்ஸ் அணிதானா என்ற கேள்வி எழும் வகையில் அந்த அணி மிகமோசமாக ஆடியது. அர்ஜென்டினாவில் அதிரடிக்கு முன்னர் பிரான்ஸ் அணியால் நிற்கவே முடியவில்லை. ஆனால், அதன்பின்னர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.

90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றதில் உலகத்தில் உள்ள மூளை முடுக்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.

அர்ஜென்டினாவிலும் கொண்டாட்டம் உச்சத்தை அடைந்தது. கோப்பையை வென்றபின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்கள் தாயகம் திரும்பியதும் அவர்களுக்கு பல லட்சம் வீரர்கள் சாலையில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற சர்வதேச போட்டியிலும் அர்ஜென்டினா வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலககோப்பைக்கு பின்னர் அர்ஜென்டினா அணி சந்தித்த இரண்டு நட்புரீதியிலான போட்டியிலும் அபார வெற்றிபெற்றது. இதன் காரணமாக பிஃபா உலகத்தரவரிசையில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் முதலிடம் பிடித்துள்ளது. அதேநேரம் முதலிடத்தில் இருந்த பிரேசில் அணி மொரோக்கோ அணிக்கு எதிரான போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த காரணத்தால் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல உலகக்கோப்பையில் இரண்டாம் இடம் பெற்ற பிரான்ஸ் அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Also Read: ரோஹித் சர்மா குறித்து நான் அப்படி சொல்லவேயில்லை.. சமூகவலைத்தளங்களில் பரவும் செய்தியை மறுத்த CSK வீரர் !