Sports
"ஹர்பஜனை பார்த்து மைதானத்துக்கு வா உன்னை அடிச்சி ஓட விடுறேன் என்பேன்" -வீரேந்திர சேவாக்கின் கலகல பேச்சு !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
தற்போது 2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் ஐபிஎல் தொடரில் ஆடியபோது ஏற்பட்ட அனுபவம் தொடர்பாக விவரித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ஐபிஎல் போட்டியில் ஆடியபோது வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. இந்திய அணியில் ஜகீர் கான், நெஹ்ரா, ஹர்பஜன் சிங் ஆகியோர் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். ஆனால் ஐபிஎல் தொடரில் நாங்கள் வேறு வேறு அணிக்கான ஆடிவந்தோம்.
போட்டிக்கு முன்னர் பயிற்சியின்போது ஒருவரை ஒருவர் சந்தித்தால் மைதானத்துக்கு வா உன்னை அடிச்சி ஓட விடுறேன் என விளையாட்டாக பேசிக்கொள்வோம். ஐபிஎல் தொடக்க காலத்தில் இந்திய அணியில் ஆடிய சொந்த அணி வீரர்களுக்கு எதிராக ஐபிஎல் போட்டியில் விளையாடுவது மாறுபட்ட உணர்வாக இருந்தது." என்று கூறியுள்ளார்.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!