Sports
"ரோஹித் சர்மா கண்டிப்பாக அடுத்த டி20 உலகக் கோப்பையில் விளையாட மாட்டார்": அடித்து சொல்லும் முன்னாள் வீரர்
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்ததை அடுத்து அணியில் பல்வேறு மாற்றங்களை பிசிசிஐ செய்து வருகிறது. குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு என்ற பெயரில் ஓரங்கட்டப்பட்டு இளம் வீரர்கள் கொண்ட அணியைத் தயார் படித்து வருகிறது. இதனால்தான் இலங்கை, நியூசிலாந்து போன்ற தொடர்களில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடிய இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இளம் வீரர்கள் சுப்மன் கில், இஷான் கிஷான் தங்களது அதிரடி ஆட்டத்தைக் கொடுத்து இந்திய அணியில் தங்களுக்கான இடத்தை உறுதிசெய்துள்ளனர். இதனால் அடுத்தடுத்த டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் மூத்த வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. ஓய்வு என்று காரணம் சொன்னாலும் அவர்கள் ஒதுக்கப்படுவது நன்றாகவே தெரிகிறது.
இந்நிலையில், அடுத்து நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
இது குறித்துக் கூறிய வாசிம் ஜாஃபர், " இனி வரும் காலங்களில் கிரிக்கெட் விளையாட்டு இளம் வீரர்களுக்கானதாகவே இருக்கும். என்னுடைய கணிப்புப்படி அடுத்த டி20 உலக கோப்பை மற்றும் ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார். ஆனால் விராட் கோலி விளையாட வாய்ப்பு உள்ளது. அதேபோல் இளம் வீரர்கள் நன்றாக விளையாடி வருவதால் அவர்களுக்கு யாருடைய வழிகாட்டலுக்கும் தேவை இருக்காது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!