Sports
"உன் காதலர் அணியில் இருக்க வேண்டுமா? நான் சொல்வதை செய்"-பாக்.கேப்டன் பாபர் அசாம் மிரட்டுவதாக பெண் புகார்!
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பவர் பாபர் அசாம். அந்நாட்டு அணியின் மூன்று விதமான போட்டிகளுக்கும் கேப்டனாக இவரே இருந்து வருகிறார். மேலும், தற்போதைய காலத்தின் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.
டெஸ்ட் தரவரிசையில் மூன்றாம் இடமும், ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்திலும், டி20 தரவரிசையில் 4-ம் இடத்திலும் உள்ளார். இவர் தலைமையிலான பாகிஸ்தான் அணி 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கும், நடந்து முடிந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இறுதி போட்டிக்கும் சென்றது.
ஆனால், அதன்பின்னர் அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. 17 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. ஆனால், சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த தொடரை பாகிஸ்தான் அணி இழந்த நிலையில், அதன்பின்னர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது.
அதைத் தொடர்ந்து பாபர் அசாமை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வந்த நிலையில், தற்போது பெரும் சர்ச்சையில் பாபர் அசாம் சிக்கியுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவர் "நான் பாகிஸ்தான் அணியின் வீரர் ஒருவரின் காதலி, என்னை அணுகிய பாபர் அசாம் உனது காதலர் அணியில் இருக்க வேண்டும் என்றால் தொடர்ந்து இதே போல் என்னிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்" என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும்பாபர் அசாம் பேசும் வீடியோவையும் அதில் இணைத்துள்ளார்.
இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பலரும் பாபர் அசாமை விமர்சித்து வருகின்றனர். முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு ஹம்சா முக்தர் என்ற பெண் தன்னுடன் இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என பாபர் அசாம் மிரட்டுவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!