Sports
எந்த இந்திய வீரரும் எட்டாத சாதனையை படைத்த சூர்யகுமார்.. அடுத்து உலக சாதனைதான்.. ரசிகர்கள் கொண்டாட்டம் !
சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார்.இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். அவரும் விராட் கோலியும் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திலும், சூரியகுமார் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் மூன்றாவது போட்டியிலும் சூரியகுமார் யாதவ் ருத்ரதாண்டவம் ஆடினார். 51 பந்துகளின் 9 சிக்ஸர்களுடன் 112 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார். அவரின் அதிரடி காரணமாக அந்த போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் டி20 போட்டியில் தனது 3-வது சதத்தை அவர் நிறைவு செய்துள்ளார். மேலும், இந்தியாவில் தனது முதல் சதத்தையும் சூரியகுமார் யாதவ் விளாசியுள்ளார். ரோஹித் சர்மா மொத்தம் 4 சதங்களோடு முதல் இடத்தில இருக்கும் நிலையில் சூரியகுமார் தற்போது 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இவரின் இந்த ஆட்டத்தை பார்த்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சூரியகுமார் போன்ற வீரர் நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே கிடைப்பார் என புகழாரம் சூட்டினார். இந்த நிலையில், தற்போது ஐசிசி சமீபத்திய தரவரிசையை வெளியிட்டுள்ளார். இதில் டி20 தரவரிசையில் இந்திய அணி வீரர் சூரியகுமார் 900 புள்ளிகளை முதல் முறையாக தாண்டி சாதனை படைத்துள்ளார்.
மேலும் இந்த சாதனையை படைத்த முதல் இந்திய வீரர் என்னும் பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ஆரோன் பின்ச் 900 புள்ளிகளையும், இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் 912 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். தற்போது சூரியகுமார் 908 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் டேவிட் மலானின் சாதனையையும் சூரியகுமார் முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!