Sports
காதலியால் ரொனால்டோவுக்கு வந்த சோகம்.. சவுதி அரேபிய தண்டனையில் இருந்து தப்புவாரா கால்பந்து நட்சத்திரம் ?
நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் கால்பந்து பயணம் முழுமையடைந்ததாக பேசப்பட்டது.
ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் அல் நாசர் அணி சார்பில் நடத்தப்பட்ட அறிமுக விழாவில் ரொனால்டோ அந்த அணியின் சீருடையை அணிந்து கலந்துகொண்டார். அப்போது அவருடன் அவரது தற்போதைய காதலியான ஜார்ஜினா ரோட்ரிகஸும் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், அவரது காதலியால் தற்போது ரொனால்டோவுக்கு மிகப்பெரிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது ரொனால்டோவும் அவரின் காதலியும் இன்னும் திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதர் முறையிலே வசித்து வருகின்றனர். சவுதி அரேபியாவில் லிவிங் டு கெதர் முறையிலே வாழ்வது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரொனால்டோ மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. ஆனால் ரொனால்டோ வெளிநாட்டு காரர் என்பதாலும், சவுதி அரேபிய அரசே அவரை அழைத்துள்ளதால் அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் வரும் காலங்களில் காதலி இல்லாமல் அவர் சவுதி அரேபிய வர அறிவுறுத்தப்படுவார் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!