Sports
வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலிருந்து முக்கிய வீரர் விலகல்.. மாற்றுவீரரை அறிவித்த BCCI !
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோசமாக தோல்வியடைந்தது. இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதன் எதிரொலியாக, இந்திய அணியைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவைக் கூண்டோடு கலைத்து பிசிசிஐ அதிரடி காட்டியது. இதற்கிடையில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்றது. அந்த அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்றது.
அதனைத் தொடர்ந்து ஷிகர் தவன் தலைமையில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மது சமி இடம்பெற்றிருந்தார். ஆனால் அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் 150 கி.மீக்கு மேல் வேகமான பந்துவீசும் திறன் பெற்றவரான உம்ரான் மாலிக் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கவனிக்கத்தக்க வீரராக மாறினார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் முடிவடைந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்ற அவர் அங்கும் தனது வேகத்தால் எதிரணியை மிரட்டினார். இந்த நிலையில், தற்போது வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!