Sports
ஓய்வு பெறப்போகிறாரா இந்திய அணியின் மூத்த வீரர் ? நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை !
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
அதில் சிறப்பாக செயல்பட்ட அவர் அணியில் தனது இடத்தை உறுதி படுத்திக்கொண்டார். மேலும், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத நிலையிலும், டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார்.
உலகக்கோப்பையில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், மூத்த வீரர்களுக்கு இனி வாய்ப்புகள் வழங்கப்படாது என கூறப்பட்டது. அதற்கு ஏற்ப நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த தொடரில் அவர் வர்ணனையாளர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
இந்த சூழலில் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அவர் விரைவில் ஓய்வு பெறப்போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி மிகக் கடுமையாக உழைத்தேன். அப்படி செய்வது பெருமையான உணர்வை தந்துள்ளது. எங்களது முயற்சியில் நாங்கள் கடைசி கட்டத்தில் வீழ்ந்தோம். ஆனாலும் அது என் வாழ்நாளில் மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது.எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தெரிவித்த ஆதரவுக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.
37 வயதான தினேஷ் கார்த்திக்கை இந்த உலகக்கோப்பையில் அணியில் சேர்த்ததற்கே கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த உலகக்கோப்பை தொடரோடு மூத்த வீரர்களை அணியில் இருந்து நீக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், மீண்டும் அணியில் இடம்பெற முடியாது என்ற காரணத்தால் தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read
-
"நேரடி நியமனம் : "ஒன்றிய அரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது" - அமைச்சர் KN நேரு விளக்கம் !
-
“பழனிசாமியிடம் துரோகத்தை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளாசல் !
-
தென்காசியில் 2.44 லட்சம் பயனாளிகளுக்கு உதவிகள் – முதலமைச்சர் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் என்னென்ன?
-
சொந்தமாக வீடு… கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பெரும் சாதனை - 1 இலட்சமாவது பயனாளிக்கு சாவி வழங்கிய முதல்வர்!
-
கட்டடமாக மாற்றிய நம்பிக்கை : பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ - இன்ப அதிர்ச்சி தந்த முதலமைச்சர் !