Sports
"நாம் எப்படி அரையிறுதிக்கு வந்தோம் என்பது அனைவருக்கும் தெரியும்"-பாக். அணியை கழுவி ஊற்றிய முன்னாள் வீரர்!
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த தொடரில் நியூஸிலாந்து, இங்கிலாந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அதைத் தொடர்ந்து முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் நியூஸிலாந்து அணியை வீழ்த்த இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இறுதி போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றியது. உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அதிலும் இந்திய அணியின் தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர், "அரையிறுதிக்கு வருவது பெரிதல்ல, வெல்வதுதான் பெரிது. இறுதிப்போட்டியில் விளையாட இந்திய அணி தகுதியானது அல்ல" என்று கூறியிருந்தார். மேலும் அந்நாட்டை சேர்ந்த சில வீரர்களும் இந்திய அணியை விமர்சித்திருந்தனர். மேலும் இறுதிப்போட்டி வரை வந்த பாகிஸ்தானை பாராட்டியிருந்தனர்.
இந்த நிலையில், சொந்த அணி என்றும் பாராமல் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு முன்னாள் வீரர் மொஹம்மது அமிர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "நாம் எப்படி அரையிறுதிப் போட்டிக்கு வந்தோம் என்பது தெரியும். நெதர்லாந்து தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதால்தான் அரையிறுதிக்கே வந்தோம். அப்படிப்பட்ட நிலையில், நமது அணியின் குறைகளை நாம் உணர்ந்து அணியை வலிமைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
- 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!