Sports
"தினேஷ் கார்த்திக்கை எதுக்கு பெஞ்சில் உக்காரவைத்தீர்கள்?" - அணி நிர்வாகத்திடம் வீரேந்திர சேவாக் காட்டம் !
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.
ஆனால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
அதில் சிறப்பாக செயல்பட்ட அவர் அணியில் தனது இடத்தை உறுதி படுத்திக்கொண்டார். மேலும், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். அதைத் தொடர்ந்து ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத நிலையிலும், டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார்.
தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலகக்கோப்பையில் ஆடும் லெவனில் இடம்பெற்ற அவர் அடுத்தடுத்த போட்டியில் பெரிதாக சோபிக்கத் தவறினார். இதனால் மீண்டும் அவருக்கு பதில் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி ஜிம்பாப்பே அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கு பதில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். ஆனால் அந்த போட்டியில் ரிஷப் பண்ட் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் ஜிம்பாப்பே அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுக்காத அணி நிர்வாகத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "உலக கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் வேண்டும் என நீங்கள் நினைத்தால் தொடர் முடியும் வரையில் அவரை அணியில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அரையிறுதிக்கு முன்னதாக அவரை அணியில் சேர்க்காமல் போனது அவர் நம்பிக்கையை குலைக்கும்.
அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அவரை ஆடவைக்க அணி நிர்வாகம் நினைத்தால் அது அவருக்கு சிக்கலை கொண்டுவரும். தினேஷ் கார்த்திக்கை பெஞ்சில் உட்கார வைப்பது நல்லதல்ல. அவர் சரியாக ரன்கள் குவிக்காவிட்டால் அவருக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டியது அணிக்கு நிச்சயம் அவசியம்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!