Sports
"அடேய் காமெராமேன்,, என்னை இப்படியா கோத்துவிடுவ! " - அஸ்வினின் செயலை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் !
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல குரூப் 2-ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அரையிறுதியில் இந்தியா -இங்கிலாந்து, பாகிஸ்தான் -நியூஸிலாந்து மோதவுள்ளன. முன்னதாக இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்பே அணியை எதிர்கொண்டது. அப்போது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் போடும்போது மைக்கில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரின் பின்னால் அஸ்வின் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது மைதானத்தில் இருந்த 2 ஸ்வெட்டர் இருந்துள்ளது. அதில் அஸ்வினின் ஸ்வெட்டரும் ஒன்று. ஆனால் அதில் எது தனக்குரியது என தெரியாததால் அஸ்வின் அது இரண்டையும் எடுத்து அதை மோர்ந்து பார்த்துள்ளார். பின்னர் அதில் ஒன்று தனதுடையது என்பதை உறுதி செய்த அவர் அதை எடுத்துக்கொண்டு திரும்பியுள்ளார்.
இது தொடர்பாக வீடியோ நேரலையில் வெளியான போது பலர் அதனை கவனிக்கவில்லை. ஆனால் சிலர் அந்த வீடியோவை பார்த்து அதை இணையதளத்தில் பதிவிட்டனர். அதன்பின்னர் அது வைரலாகியுள்ளது. பலரும் அஸ்வின் ஏன் அப்படி செய்தார் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்த வீடீயோவை குறிப்பிட்டு முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் அப்படி என்ன மோந்து பார்க்கிறீர்கள் அஷ்வின் என்று கிண்டல் செய்திருந்தார்.
இந்த நிலையில், இத்தகைய கேள்விக்கு அஸ்வின் பதிலளித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், அதில் "முதலில் இரண்டுக்கும் இடையேயான அளவுகளை (சைஸ்) சோதித்தும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அதில் எந்த வீரருடைய பெயரின் முதல் எழுத்து எழுதப்பட்டுள்ளது என்பதை சோதித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கடைசியாக நான் உபயோகப்படுத்தும் வாசனை பெர்பிஃயூம் வாசனையை வைத்து என்னுடையதை கண்டுபிடித்தேன். அடேய் கேமராமேன்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த பதிலும் தற்போது வைரலாகி வருகிறது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!