Sports
ICC Rank: முதல் இடத்தில் சூர்யகுமார்.. தொடரும் கோலியின் ஆதிக்கம்.. 3-ம் இடத்துக்கு முன்னேறிய CSK வீரர்!
சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.
இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். அவரும் விராட் கோலியும் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். நெதர்லாந்து அணியுடனான போட்டியில் சூரியகுமாரின் அதிரடி ஆட்டமே இந்தியா பெரிய ஸ்கோரை எட்ட உதவியது.
அதன்பின்னர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. பவுலிங்கிற்கு சாதகமான பெர்த் மைதானத்தில் மற்ற இந்திய அணி வீரர்கள் திணறிய போதும், சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். 40 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்களை விளாசினர்.
அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியிலும் 16 பந்துகளில் 30 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த உலககோப்பைக்கு முன் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் 3-ம் இடத்தி இருந்தார். இதன் காரணமாக இந்த உலகக்கோப்பையில் சூரியகுமார் முதல் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது அபார ஆட்டத்தின் மூலம் அதனை சந்தித்துள்ளார். டி20 போட்டிகளுக்கான ஐசிசி வெளியிட்ட புதிய தரவரிசைப் பட்டியலில் சூரியகுமார் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இந்த உலககோப்பை போட்டியில் தொடர்ந்து அசத்திவரும் விராட் கோலி மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறி 638 புள்ளிகளுடன் 10வது இடத்தை தக்கவைத்துள்ளார். அதேபோல நியூஸிலாந்து வீரரும் தற்போதைய சிஎஸ்கே அணி வீரருமான டெவான் கான்வெ 4 இடங்கள் முன்னேறி 3-ம் இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து சொதப்பி வரும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 4-ம் இடத்தில் இருக்கின்றார்.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!