Sports
"கிரிக்கெட் விளையாடி இப்போது மளிகைபொருள் கூட வாங்கமுடியாது" - உலகக்கோப்பை வென்ற அணி கேப்டன் ஆதங்கம் !
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தகுதி சுற்றில் இலங்கை,அயர்லாந்து, நெதர்லாந்து, ஜிம்பாப்பே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. 2 முறை சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி தகுதி சுற்றில் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறியது.
வெஸ்ட்இண்டீஸ் அணியின் இந்த தோல்வி கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது. சமீப ஆண்டுகளாக அந்த அணி சீராக விளையாடவில்லை என்றாலும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெரும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.இந்த தோல்வியைத் தொடர்ந்து நவம்பர்-டிசம்பரில் நடக்கும் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரோடு வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக பில் சிமோன்ஸ் அறிவித்துள்ளார்.
வெஸ்ட்இண்டீஸ் அணியின் இந்த நிலைமைக்கு அந்த நாட்டு வீரர்கள் தேசிய அணியை விட ஐபிஎல் போன்ற வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் காரணம் என்ற விமர்சனம் சில ஆண்டுகளாக தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. அதோடு அந்த அணி வீரர்களும் பல தருணங்களில் இந்த விமர்சனத்தை உண்மையாகும் வகையிலேயே செயல்பட்டும் வருகின்றனர்.
அதே நேரம் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அணி வீரர்களுக்கு உரிய ஊதியத்தை கொடுக்காததே அந்த அணி வீரர்கள் லீக் போட்டிகளில் பங்கேற்க முக்கிய காரணம் என்று பல முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இது குறித்து உலகக்கோப்பை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் டேரன் சமி வெளிப்படையதாக கிரிக்கெட் வாரியத்தை சாடியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "இந்திய வீரர்களுக்கும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கும் கொடுக்கப்படும் சம்பளம் மிகப்பெரிய அளவில் வேறுபாடு உடையது. இதனால் பல சர்ச்சைகள் எழத்தான் செய்யும். அதனை தவிர்க்க முடியாது. கிரிக்கெட் மீதான காதலுக்காக நாங்கள் விளையாடிய காலம் எல்லாம் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது அது இல்லை. கிரிக்கெட் மீதான அந்த காதலை வைத்து இப்போது மளிகை பொருள் கூட வாங்க முடியாது" எனக் காட்டமாக கூறியுள்ளார்.
Also Read
-
குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!
-
ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பெண் : உயிர் காத்த RPF வீரர் - குவியும் பாராட்டு!
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!