Sports
நகை, பணம், ATM கார்டு திருட்டு.. லண்டனில் இந்திய மகளிர் அணி வீராங்கனைக்கு நேர்ந்த கொடுமை!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 3 -0 என்ற கணக்கில் சிறப்பான ஒரு வெற்றியை பெற்றுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த கடைசி போட்டியில் இந்திய வீரர் தீபதி ஷர்மா, இங்கிலாந்து வீரர் சால்லோட் டீனை 'நான்- ஸ்ட்ரைக்கர்' முடிவில் ரன் அவுட் ஆக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சை அடங்குவதற்கு இந்திய அணி வீரர் தனியா பாட்டியா, லண்டனில் ஹோட்டலில் தங்கியிருந்தபோது தனது நகை, பணம் இருந்த பைகள் திருடப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது ட்விட்டர் பதிவில், "லண்டனில் உள்ள மேரியட் ஹோட்டலில் இந்திய மகளிர் அணியுடன் நான் தங்கியிருந்தேன். அப்போது தனது அறைக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்து பணம், நகை, கைக்கடிகாரங்கள், ஏ.டி.எம் கார்டுகளை திருடிச் சென்றுள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு தனக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். கிரிகெட் வீரர்கள் பலரும் விரும்பும் ஹோட்டல் மேரியட். இங்கு இத்தகைய பாதுகாப்பு இல்லாதது வியக்க வைக்கிறது" என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த ட்விட்டர் பதிவை அடுத்து, மேரியட் ஹோட்டல் நிர்வாகம் இவரிடம் விவரங்களைக் கேட்டறிந்துள்ளது. தனியா பாட்டியா இங்கிலாந்து தொடரின் இடம் பெற்றிருந்தாலும் அவர் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தனியா பாட்டியா 19 ஒருநாள் போட்டி, 53 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!