Sports
IPL தொடரில் ஆடிய பிரபல இளம் கிரிக்கெட் கேப்டன் மீது பாலியல் புகார்.. சிறுமியின் புகாரால் அதிர்ச்சி !
2016-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, நேபாள அணியின் கேப்டனாக இருந்தவர் சந்தீப் லமிச்சானே. லெக் ஸ்பின்னரான அவர், அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் பெரும் கவனத்தை ஈர்த்தார்.
அதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடந்த லீக் போட்டிகளில் பங்கேற்று அங்கும் சிறப்பாக செயல்பட்டார். அதைத் தொடர்ந்து ஐ.பி.எல் தொடரிலும் அவர் இடம்பெற்றார். தனது சிறப்பான செயல்பாடு காரணமாக நேபாள அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவர் மீது காவல்நிலையத்தில் 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கூறியுள்ளார்.அவர் கூறியுள்ள புகாரில், நான் அவரின்தீவிர ரசிகை. அவருடன் வாட்ஸ்அப் வழியாக தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். என்னை சந்திக்க வேண்டும் என முதன் முதலில் அவரே என்னிடம் ஆவலுடன் கூறினார். பின்னர் அவரை சந்தித்த நிலையில், 2 முறை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய நேபாள காவல்துறை அதிகாரிகள், சிறுமிக்கு உடல்பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளது. இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!