Sports
சிறைக்கு செல்லும் பிரபல கால்பந்து வீரர் - நிரந்தர தடை விதிக்க முன்னாள் CLUB கோரிக்கை!பின்னணி என்ன?
பிரபல கால்பந்து வீரர் நெய்மர், பிரேசிலை சேர்ந்த சாண்டோஸ் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த திறமையை கண்ட உலக புகழ்பெற்ற கால்பந்து கிளப்களில் ஒன்றான ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா கிளப் அவரை தங்கள் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்தது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சாண்டோஸ் கிளப்பும் புகார் அளித்தது. இது தொடர்பாக வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதனிடையே பார்சிலோனா கிளப்பிலிருந்து விலகிய நெய்மர் பிரான்ஸை சேர்ந்த PSG கிளப்பில் இணைந்தார். இந்த ஒப்பந்தமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது வரை நெய்மர் PSG கிளப்பில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், நெய்மர் மீது நீதிமன்றத்தில் நடந்த வந்த வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கத்தாரில் நடைபெறும் பிஃபா உலகக்கோப்பைக்கு முன்பாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்த வழக்கில் நெய்மர் மற்றும் அவரது தந்தை, சாண்டோஸ் கிளப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்த ஒப்பந்த முறைகேட்டில் ஈடுப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு தண்டனை உறுதியானால் அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த விவகாரத்தை நெய்மரின் முன்னாள் கிளப் தீவிரமாக எடுத்துள்ளது. அவரின் இந்த முறைகேட்டுக்காக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், இனிமேல் அவர் முழுவதுமாக கால்பந்து விளையாட தடை விதிக்க வேண்டும் என முறையிடப் போவதாக தெரிவித்துள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!