Sports

செஸ் ஒலிம்பியாட் - தமிழ்நாடு அரசின் செயலுக்கு பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு!

உலக செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), ஏஐசிஎஃப், தமிழ்நாடு அரசு இணைந்து முதன்முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகின்றன.

சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் 187 நாடுகளைச் சோந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா்.

இந்த தொடருக்காக தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள் போன்றவை செஸ் விளம்பரத்தால் ஜொலிக்கிறது.

மேலும் காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலம் செஸ் கட்டங்களை போல வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இது தற்போது சுற்றுலா இடமாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில் இன்று விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ள ஆவின் பால் பாக்கெட்டுகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் இடம்பெற்றுள்ளது. இந்த விளம்பரம் பல்வேறு தரப்பினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதே நேரம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல செஸ் வீரர் விஸ்வாநாதன் ஆனந்த்தும் தமிழ்நாடு அரசின் இந்த செயலை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய வீட்டுக்கு இன்று வழங்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், காலையில் "உங்களுடைய பால் பாக்கெட் இப்படி வழங்கப்பட்டால் என ட்வீட் செய்துள்ளார்.

Also Read: "உலககோப்பை நடப்பது ஆஸ்திரேலியாவில்,அங்கு இந்திய அணியில் நடராஜன் இருக்கவேண்டும்"-முன்னாள் வீரர் கருத்து!