Sports
"ஹர்திக் பாண்டியா அடுத்த ஆண்டோடு ஓய்வு பெற்று விடுவார்"- ரவி சாஸ்திரியின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றார். 31 வயதில் அவர் ஓய்வு பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பேசிய அவர், மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பது கடினமாக இருப்பதாகவும், நாங்கள் பெட்ரோல் போட்டதும் ஓடும் கார் கிடையாது என்றும் விமர்சித்தார்.
கிரிக்கெட் வாரியங்கள் அதிக பணத்துக்காக இவ்வாறு அடிக்கடி போட்டிகள் நடத்துவதால் வீரர்கள் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், ஒரு தொடருக்கும் அடுத்த தொடருக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார், வீரர்கள் ஓய்வு குறித்து பேசிய அவர், வீரர்கள் தாங்கள் எந்த ஃபார்மட்டில் ஆடவேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் ஆடவேண்டும் என்பதில் பாண்டியா உறுதியாக இருக்கிறார். வேறு எதிலும் ஆடுவதை பற்றி அவர் கவலைப்படவில்லை.
அடுத்த ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா ஆடுவார். அதன்பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விலகிவிடுவார். மற்ற வீரர்களும் தாங்கள் ஆடவேண்டிய ஃபார்மட்டை அவர்களே தேர்வு செய்துகொண்டு, விரும்பாத ஃபார்மட்டிலிருந்து விலகிவிடுவார்கள். அது அவர்களது உரிமை." என்று கூறியுள்ளார்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!