Sports

இஷன் கிஷனால் ரோஹித் ஷர்மா, KL ராகுலுக்கு ஆபத்து? - முன்னாள் இந்திய வீரர் ஓபன் டாக்!

சமீபத்திய சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய ஓப்பனர் இஷன் கிஷன் மிகச் சிறப்பாக ஆடிவரும் நிலையில், ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி போன்றவர்கள் இன்னும் அணியில் அசைக்க முடியாத வீரர்களா என்று முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சபா கரீமிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், அவர்கள் இப்போதைய அணியில் நிச்சயம் இடம்பெற்று விடுவார்கள் என்றும், இருந்தாலும் அவர்களை நீக்குவது பற்றிய கடினமான முடிவுகளை எடுக்க தேர்வுக்குழு உறுப்பினர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 5 சர்வதேச டி20 போட்டிகளிலும் இஷன் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும்தான் இந்திய அணியின் ஓப்பனர்களாக களமிறங்கினார்கள். அந்தத் தொடரில் இஷன் கிஷன் 2 அரைசதங்களும், கெய்க்வாட் 1 அரைசதமும் அடித்தனர். ஆனால், இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பினால், இவர்கள் இருவரின் இடமும் கேள்விக்குறியாகிவிடும். விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் திரும்பினால், கெய்க்வாடுக்கு ஸ்குவாடிலேயே இடம் கிடைக்காது. இந்திய அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்த அனுபவமிக்க

இந்த டாப் 3 (ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி) வீரர்கள் கடந்த ஆண்டு நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இணைந்து விளையாடவில்லை. லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தாலும், ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோருக்கு இது மிக மோசமான சீசனாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களின் ஸ்டிரைக் ரேட் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இஷன் கிஷனின் சமீபத்திய ஃபார்மைக் கருத்தில் கொள்ளும்போது, அந்த மூன்று வீரர்களின் இடமும் உறுதியானதுதானா என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர்களுள் ஒருவரான சபா கரீமிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், "இது தேர்வாளர்களுக்கு மிகவும் கடினமான ஒரு தருணம். இப்போதைய சூழ்நிலையில் அவர்கள் மூவருமே (ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல்) இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுவிடுவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் மீது சில விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கும்போது, அதை அவர்கள்தான் சரி செய்து இந்தக் கடினமான சூழ்நிலையிலிருந்து மீண்டு வரவேண்டும். ஒருவேளை அவர்கள் அதை செய்யத் தவறினால், அணி நிர்வாகமோ தேர்வுக்குழு உறுப்பினர்களோ, அவர்களிடம் அந்தக் கடினமான முடிவுகள் எடுப்பது பற்றிப் பேசவேண்டும். ஏனெனில், அணியில் இப்போது நிறைய போட்டி இருக்கிறது. ஆனால், இந்த வீரர்களுக்கு அணியின் தேவையை, டி20 பேட்டிங்கின் தேவையை உணர்ந்து விளையாடுவதற்கான அனுபவம் இருக்கிறது. அவர்கள் அதைச் செய்யவேண்டும்" என்று தெரிவித்தார்.

Also Read: இந்தியை எதிர்த்து 577 மைல்கள் பயணம்: திராவிட இயக்க தீரர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு தினம்!