Sports
மெஸ்ஸியின் கழுத்தை நெரித்த ரசிகர்.. மீட்டுச் சென்ற பாதுகாவலர்கள் - மைதானத்தில் நடந்தது என்ன? #VIRAL_VIDEO
உலகக்கோப்பை கால்பந்தாட்டத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அர்ஜென்டினா மற்றும் ஈக்வடார் அணிகள் மோதின.
இந்தப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் நுழைந்து பிரபல நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் கழுத்தைப் பிடித்து இறுக்கியபடி தனது செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள் உடனே ரசிகரிடம் இருந்து மெஸ்ஸியை மீட்டு அழைத்துச் சென்றனர்.
பிறகு அந்த ரசிகரையும் மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். பின்னர் அந்த ரசிகர் மெஸ்ஸியுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் "நான் மிகச்சிறந்த வீரரைச் சந்தித்தேன். உங்கள் அழகான கால்பந்து விளையாட்டின் மூலம் பல ஆண்டுகளாக நீங்கள் எனக்கு வழங்கிய அனைத்து மகிழ்ச்சியான தருணங்களுக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சமீபத்தில் நடந்த போட்டியின்போது கூட ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்தார். தற்போது மீண்டும் ரசிகர் ஒருவர் நுழைந்துள்ளதால் மைதானத்தின் பாதுகாப்பு சரியில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து FIFA நிர்வாகம் கருத்து தெரிவிக்க வேண்டும் என கால்பந்தாட்ட அணிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
Also Read
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!