Sports
முன்னாள் துணைப் பிரதமர் மீது பாலியல் புகார்: மாயமான பிரபல டென்னிஸ் வீராங்கனை : சக வீரர்கள் அதிர்ச்சி!
சீனாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய். இவர் அண்மையில் முன்னாள் சீன துணைப் பிரதமர் மீது பாலியல் புகார் கூறியது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாலியல் குறித்து டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய், “முன்னாள் துணை அதிபர் ஜாங் ஜி ஓர்லி தன்னை பல ஆண்டுகளாகப் பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதற்கு நான் மறுத்தபோதும் என்னைப் பலவந்தப்படுத்தினார். இதற்கான ஆதாரங்கள் எதுவும் என்னிடம் கிடையாது. ஆனால் அவரது மனைவிக்கு இது தெரியும்” என தெரிவித்துள்ளார்.
முன்னாள் துணை அதிபர் மீதான டென்னிஸ் வீராங்கனையின் பாலியல் புகார் சீனாவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் சக டென்னிஸ் வீரர்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகார் கூறியதை அடுத்து பெங் ஷுவாய் எங்க இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அவரை யாரும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் அவருக்கு ஏதோ நடந்து விட்டது என பலரும் கூறி வருகிறார்கள். மேலும் டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய்க்கு ஆதரவாக சக வீரர்கள் செரினா வில்லியம்ஸ், நவோமி ஓசாகா, ஜோகோவிக் போன்றோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்
இந்நிலையில், பெய்ஜிங்கில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் பெங் ஷுவாய் இருப்பதுபோன்ற படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு எதுவும் ஆகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த புகைப்படம் குறித்த தகவல் உண்மைதானா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உலக நாடுகள் தெரிவித்துள்ளன.
Also Read
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!