Sports

ஆடு பகை.. குட்டி உறவு..? மீண்டும் ஐபிஎல் ஸ்பான்சர் ஆனது சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம்!

இந்திய எல்லையில் சீன ராணுவத்தினர் ஊடுறுவியதை அடுத்து அதற்கு மத்திய அரசு சார்பாக பெரிதளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒரு அறிக்கையோ, ட்விட்டர் பதிவோ கூட பகிராமல் இருந்த மோடி அரசு, இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து சீனவைச் சேர்ந்த பல்வேறு செயலிகளை தடை செய்திருந்தது.

மேலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களும் சீன பொருட்களை புறக்கணிப்பதாகச் சொல்லி டிவிக்களை உடைத்து எதிர்ப்பு தெரிவிப்பதாகச் சொல்லி சீனாவைச் சேர்ந்த ஃபோன்களிலேயே அதனை பதிவும் செய்திருந்தனர். அதனையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்த 13வது ஐபிஎல் சீசனுக்கான டைட்டில் ஸ்பான்சரில் இருந்து சீன நிறுவனமான விவோ விலகியது.

Also Read: “இந்தபக்கம் சீனாவை புறக்கணிப்போம் கோஷம்; அந்தப்பக்கம் சீன நிறுவனங்களிடம் நிதி”: மோடி அரசின் இரட்டை வேடம்!

அதன் பிறகு ட்ரீம் 11 நிறுவனத்துக்கு கைக்கு டைட்டில் ஸ்பான்சர் மாறியது. இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான 14வது ஐபிஎல் சீசனுக்கான பிரதான ஸ்பான்சராக மீண்டும் விவோ நிறுவனம் உள் நுழைந்துள்ளது. ஏனெனில், 2018ம் ஆண்டு பிசிசிஐ உடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி 5 ஆண்டுகளுக்கு விவோ நிறுவனமே டைட்டில் ஸ்பான்சராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பிசிசிஐக்கு ரூ.440 கோடி ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஊடகங்களில் மட்டும் சீனா உடனான எந்த உறவும் இல்லையென வெளி வேஷம் போடும் மோடி ஆதரவாளர்கள் தற்போது கோடிக்கணக்கான வருமானத்திற்காக மீண்டும் விவோ நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது மக்களை ஏமாற்றும் செயலாக பார்க்கப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: “VIVO தான் ஸ்பான்சர்” : உறுதி செய்த பிசிசிஐ - பா.ஜ.கவினர் போராட்டங்களை கண்டுகொள்ளாத அமித்ஷாவின் மகன்!