Sports
IND vs AUS : ஒற்றை இலக்கத்தில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்.. மோசமான ஸ்கோர் பட்டியலில் இடம்பெற்ற இந்திய அணி!
88 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தன் குறைவான ஸ்கோரைப் பதிவு செய்திருக்கிறது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணியுடனான பகலிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்கள் மட்டும் எடுத்து அதிர்ச்சளியித்திருக்கிறது டீம் இந்தியா!
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை இன்று தொடங்கியது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றிருந்ததால் ஓரளவு டீசன்ட்டான ஸ்கோர் அடித்தால் போட்டியை வெல்லலாம் என்று ரசிகர்கள் கனவு கான, அதை நொறுக்கியது கம்மின்ஸ், ஹேசில்வுட் கூட்டணி. நைட் வாட்ச்மேனாக வந்த பும்ரா விரைவில் வெளியேற, அவரை அப்படியே பின்தொடர்ந்தார்கள் நமது பேட்ஸ்மேன்கள்.
தொடர்ந்து நான்காவது மற்றும் ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் ஆஸ்திரேலிய பௌலர்கள் பந்துவீச, கீப்பரிடமும் ஸ்லிப்பிலும் கேட்ச் கொடுத்து வரிசையாக நடையைக் கட்டினார்கள். மயாங்க் அகர்வால் -9, புஜாரா - 0, ரஹானே - 0 என அடுத்தடுத்து வெளியேற கேப்டன் கோலி நின்றால்தான் தப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. கம்மின்ஸ் பந்தில் பவுண்டரி அடித்து கவுன்ட்டர் அட்டாக்கில் கோலி ஈடுபட நினைத்தார்.
ஆனால், அது வேலைக்கு ஆகவில்லை. ஸ்லிப்பில் நின்றிருந்த கிரீனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 19 ரன்களுக்கு ஆல் அவுட் என்ற படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. டெஸ்ட் வரலாற்றில் 6 விக்கெட் இழப்புக்கு இந்தியா எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் அதுதான்.
ஏதாவது ஒரு பார்ட்னர்ஷிப்பாவது நிலைத்து நிற்கும் என்று எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சஹா - 4, அஷ்வின் - 0, விஹாரி - 8 என தொடர்ந்து வெளியேறினார்கள். கம்மின்ஸ் பந்துவீச்சில் கையில் காயமடைந்து ஷமி வெளியேற இந்திய அணியின் இன்னிங்ஸ் 36 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் குறைந்தபட்ச ஸ்கோர். அதுமட்டுமல்லாமல், ஒரு பேட்ஸ்மேன்கள்கூட இரட்டை இலக்க ஸ்கோரைத் தாண்டவில்லை. இதுவும் முதல் முறை!
Also Read
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !