Sports
“2021லும் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது சந்தேகமே” - டோக்கியோ ஒலிம்பிக் தலைவர் பீடிகை!
உலகம் முழுவதும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் கோரத் தாண்டவம் காரணமாக ஜப்பானின் டோக்கியோவில் இந்தாண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் 2020 போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜப்பான் அரசு ஒலிம்பிக் போட்டியை நடத்த மிகத் தீவிரமாக இருந்த நிலையில், கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளும் தங்களுடைய வீரர்களை போட்டிக்கு அனுப்ப முடியாது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இதனையடுத்து, வேறுவழியில்லாமல் ஜப்பான் அரசும் ஒலிம்பிக்கை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
இந்நிலையில், தொடக்கத்தில் கொரோனா தொற்று ஜப்பானில் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி தற்போது வரை 5,000 பேர் பாதிக்கப்பட்டு, 100 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகையால், மேலும் பாதிப்பு எண்ணிக்கை கூடும் பட்சத்தில் ஜப்பானில் அடுத்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த முடியாத சூழல் உருவாகும் என டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி டோஷிரோ முடோ தெரிவித்துள்ளார்.
மேலும், தொற்று அதிகரித்து வருவதால், அவசர நிலையை பிரதமர் அபே அறிவித்துள்ளார். ஆகையால் எதிர்வரும் நாட்களின் நிலையைப் பொறுத்தே ஒலிம்பிக் குறித்து எந்த முடிவையும் எடுக்க முடியும் என முடோ கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஒலிம்பிக்கை ஒத்திவைக்கும் பட்சத்தில் 200 முதல் 600 கோடி ரூபாய் வீணாகும் எனக் கூறிய அவர், ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்வு இந்த வாரத்துடன் முடிவுக்குக் கொண்டு வரப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!