Sports
சென்னை அணி கழட்டிவிடப்போகும் ஐந்து வீரர்கள் இவர்கள் தான் - பரபர தகவல்!
ஐ.பி.எல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தற்போது இருந்தே பல அணிகள் தங்கள் அணி வீரர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அவ்வகையில், ஒவ்வொரு அணியும் தங்களது அணியிலிருந்து வீரர்களை விடுவித்தும் வாங்கிக்கொண்டும் உள்ளது. பல வீரர்கள் ஏற்கனவே விளையாடி வந்த அணியில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், டெல்லிக்கு அணிக்கும், ராஜஸ்தான் வீரர் ரஹானே டெல்லி அணிக்கும், டெல்லி அணியின் ட்ரெண்ட் போல்ட் மும்பை அணிக்கும் மாறியுள்ளனர்.
அதேபோல, பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த அங்கித் ராஜ்புத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாறியுள்ளார். ராஜஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம், பஞ்சாப் அணிக்குச் செல்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப் போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
அதன்படி இந்திய அணியின் வீரரான கேதார் ஜாதவ் மற்றும் மோகித் சர்மா, இங்கிலாந்தைச் சேர்ந்த சாம் பில்லிங்ஸ் மற்றும் டேவிட் வில்லி, நியூசிலாந்தை சேர்ந்த ஸ்காட் குகளீன் ஆகியோரை விடுவிக்க சென்னை அணி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
Also Read
-
முகத்தை மறைத்து சென்ற பழனிசாமி: பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக.. Chennai Press Club கண்டனம்!
-
வக்பு சட்டத்திருத்தம் : “முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது” - முரசொலி!
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!