Sports
சத்தமில்லாமல் சாதனை படைத்த சாஹல்... அஷ்வின், பும்ராவை முந்தி அபாரம்!
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது T20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று T20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கும், பந்துவீச்சும் அபாரமாக இருந்தது.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். ஆனால், இந்த விக்கெட்டின் மூலம் அவர் ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.
இந்திய அணி சார்பாக சர்வதேச T20 போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் சாஹல். நேற்று வீழ்த்திய 1 விக்கெட்டை சேர்த்து மொத்தம் 34 T20 ஆட்டங்களில் விளையாடிய சாஹல் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, அஸ்வின் 42 போட்டிகளிலும், பும்ரா 41 போட்டிகளிலும் 50 விக்கெட் மைல்கல்லை எட்டினர். அவர்களை முறியடித்து 34 போட்டிகளிலேயே அந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார் சாஹல்.
குறைந்த T20 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஜந்தா மெண்டிஸ் (26 போட்டிகள்), ரஷித் கான் (31 போட்டிகள்), இம்ரான் தாஹிர் (31 போட்டிகள்), முஸ்தாபிசூர் (33 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர். இதையடுத்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார் சாஹல்.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!