Sports
“அனுஷ்கா சர்மாவுக்கு டீ எடுத்துவருவது தான் தேர்வுக்குழுவினரின் வேலை” : முன்னாள் கிரிக்கெட் வீரர் காட்டம்!
இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவினரை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவின் தகுதி குறித்து அவ்வப்போது கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் பரூக் இன்ஜினியர் இந்திய அணியின் தேர்வுக் குழு உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், ''நமக்கு ஒரு மிக்கி மவுஸ் தேர்வுக் குழு கிடைத்துள்ளது. தேர்வுக் குழுவின் நடைமுறையில் விராட் கோலி ஆதிக்கம் செலுத்துகிறார். இந்த தேர்வுக் குழு எந்த வகையில் தகுதி பெறுகிறார்கள். அவர்கள் அனைவரும் இணைந்தே பத்து - பன்னிரெண்டு டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடி உள்ளார்கள்.
இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை தொடரின்போது அவர்கள் அனைவரும் அனுஷ்கா சர்மாவிற்கு டீ எடுத்து வரும் வேலையை தான் செய்தார்கள். என்னைப் பொறுத்தவரை திலிப் வெங்சர்க்கார் போன்ற ஒருவர் தான் தேர்வுக் குழுவில் இடம்பெற வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
பரூக் இன்ஜினியரின் பேச்சு இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பரூக் என்ஜினியரின் இந்த கருத்துக்கு அனுஷ்கா சர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Also Read
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !
-
“இது ஆன்மிகம் அல்ல; கேடுகெட்ட அரசியல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
“மதுரை தொழில் நகரமாகவும் புகழ் பெறவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை இலட்சியம்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் சாபக்கேடு எச்.ராஜா” : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!