Sports
தோனி அமைத்துக்கொடுத்த பாதையில் விராட் கோலி சிறப்பாக செயல்படுகிறார் - பிரையன் லாரா கருத்து!
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக லெஜண்ட்ஸ் டி 20 தொடர் மும்பையில் நடக்க உள்ளது. இதில் ஓய்வுபெற்ற முன்னணி வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக நடைபெற்ற நிகழ்வில் மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வீரர் பிரையன் லாரா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்திய அணியின் தற்போதைய வேகப்பந்து வீச்சு தாக்குதல் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது இதை பார்த்தேன். ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தரம் வாய்ந்த பவுலர்களாக திகழ்கிறார்கள்.
தற்போதைய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி தனக்கு மேற்கிந்திய தீவுகளின் 1980, 1990களின் வேகப்பந்து வீச்சுக் கூட்டணியை நினைவூட்டுகிறது. ரோஹித் சர்மா ஒரு அபாரமான வீரர். அவர் லிமிடெட் ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும்போது டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடியும்.
விராட் கோலி இப்போது சிறந்த கேப்டனாக செயல்படுகிறார். களத்திலும் சரி, வெளியிலும் சரி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்.
தோனி அமைத்துக்கொடுத்த பாதையில் அவர் சிறப்பாக செயல்படுகிறார். 1970, 80களில் மே.இ.தீவுகள், 1990களில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தியது போல் தற்போது இந்தியா கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்துகிறது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டின் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் பொல்லார்ட் அனுபவம் வாய்ந்தவர்.
அவருக்கு சக வீரர்களின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன். அவர் உலகம் முழுவதும் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அதனால் வெற்றிகரமாக செயல்பட என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து வைத்திருப்பார். எனவே அவரது நியமனம் நல்ல முடிவு தான்'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!