Sports
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை : அதிரடியாக முன்னேறிய ரோஹித் சர்மா, அஸ்வின்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2018ம் ஆண்டிற்கு பிறகு 900 புள்ளிகளுக்கு கீழ் குறைந்து 899 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த ரோஹித் சர்மா முதன்முதலாக முதல் 20 இடத்திற்குள் நுழைந்துள்ளார். 54வது இடத்தில் இருந்த அவர் 17வது இடத்துக்கு ரோஹித் சர்மா முன்னேறியுள்ளார்.
இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததையடுத்து தரவரிசையில் 38 இடங்கள் உயர்ந்து, 25-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் டாப்10 வரிசையில் இடம் பிடித்து 10-வது இடத்தை அடைந்துள்ளார். மேலும், ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் அஸ்வின் முதல் 5 இடங்களுக்குள் உள்ளார். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவிந்திர ஜடேஜா இரண்டாவது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
Also Read
-
வாக்களித்த மக்களுக்கு கைக்கொடுக்க இவ்வளவு தயக்கம் ஏன்? - முதலமைச்சரின் சர்ச்சை செயலுக்கு எழும் கண்டனம்!
-
அதிரடியாக ஜாகீர் கானை இறக்கிய சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் மைண்ட்.. இதுதான் ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
-
உயிரைக் காக்கும் மருந்தா? விளம்பரத்திற்கு பயன்படும் மோதிரமா? : த.வெ.க.வை நோக்கி எழும் கேள்விகள்!
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 : தங்கத்தை தட்டித் தூக்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
-
“எங்கப்பா காமராஜர் படம்?” : வெளிச்சத்திற்கு வந்த த.வெ.க அரசின் பித்தலாட்டம்!