Sports
கிரிக்கெட்டை தொடர்ந்து சினிமாவில் கால் பதிக்கும் தல தோனி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி, உலகக் கோப்பை போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டியுடன் தோற்று வெளியேறிய போது, தோனி ஓய்வு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
அதைத்தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தொடரில் இருந்து விலகி 2 மாதம் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், அவர் தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனான சஞ்சய்தத் ''டாக்ஹவுஸ்'' என்ற புதியப் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சமீர் கார்னிக் என்பவர் இயக்க உள்ளார். இந்தப்படத்தில், சுனில் ஷெட்டி, இம்ரான் ஹாஷ்மி, மாதவன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். மேலும் அவர்களுடன் இணைந்து தோனியும் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என கூறப்படுகிறது. தோனி ஏற்கனவே பல்வேறு விளம்பரப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடித்தக்கது. இப்போது சினிமாவிலும் தோனி களம் காண இருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!