Sports
இந்திய அணிக்குள் ரிஷப் பண்ட்டால் ஏற்பட்ட குழப்பம் : சர்ச்சை குறித்து விளக்கமளித்த கோலி!
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் (செப்., 22) நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 7.2 ஓவர்களில் தவான் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விராட் கோலி களத்தில் இருந்தார். அடுத்து களமிறங்குவதற்காக ரிஷப் பண்ட்டும் ஸ்ரேயாஸ் அய்யரும் ஒரே நேரத்தில் களத்தை நோக்கி வந்தனர்.
இதனால் போட்டியைக் கண்ட ரசிகர்கள் மட்டுமின்றி களத்தில் இருந்த கோலியும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ரிஷப் பண்ட் களமிறங்க, ஷ்ரேயாஸ் அய்யர் திருப்பி சென்றார். ஆனால் இருவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் சந்திப்பில் இது குறித்துப் பேசிய கோலி, ‘‘10 ஓவருக்குள்ளாக இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டால், நான்காம் வரிசையில் ஷ்ரேயாஸ் அய்யர் வர வேண்டும், 10 ஓவரை தாண்டி 2 விக்கெட்டுகள் விழுந்தால், நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட் வர வேண்டும் என முடிவு செய்திருந்தோம்.
இருவரும் ஆடுகளத்தை நோக்கி வரும்போது, கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. இருவரும் ஆடுகளத்திற்குள் வந்திருந்தால் இன்னும் வேடிக்கையாக இருந்திருக்கும். ஏனென்றால், ஆடுகளத்திற்குள் மூன்று பேட்ஸ்மேன்கள் இருந்திருப்போம். ரிஷப்பிற்கும் ஷ்ரேயாஸ் அய்யருக்கும் இடையேயான மிஸ் கம்யூனிகேஷனால்தான் இது நடந்தது.’’ என்றார்.
கோலியின் கூற்றுப்படி பார்த்தால் ஷ்ரேயாஸ் அய்யர் தான் நான்காம் வரிசையில் இறங்கியிருக்க வேண்டும். ஏனெனில், தவான் எட்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்துவிட்டார். எனவே களத்தில் இருந்த கோலியுடன் ஷ்ரேயாஸ் அய்யர் தான் ஜோடி சேர்ந்திருக்க வேண்டும்.
ஆனால், ரிஷப் பண்ட் களத்திற்குச் சென்றுவிட்டார். இருவரும் ஒரே நேரத்தில் ஆடுகளத்திற்குள் வந்திருந்தால் இந்திய அணிக்கு அவமானகரமான நிகழ்வாக அமைந்திருக்கும். இந்தச் சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.
Also Read
-
100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் ஒன்றிய அரசு : மாநிலங்களின் தலையில் கூடுதல் நிதிச்சுமை!
-
“We Will Never Allow You...” : பாசிச கலவர சக்திகளை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!
-
புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக.. தமிழ்நாடு ஹஜ் இல்லம் : நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்
-
கேரம் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன்: உணவு டெலிவரி வேலை பார்த்துக் கொண்டு சென்னை இளைஞர் அசத்தல்!
-
உலகளவில் விளையாட்டுகளில் பதக்கங்கள்... அள்ளிக்குவித்த தமிழக வீராங்கனையருக்கு முதல்வர் ஊக்கத்தொகை!