Sports
“இவரது கேப்டன்சியில் விளையாடவேண்டும்” - தண்டனைக் காலம் குறைக்கப்பட்ட ஸ்ரீசாந்த்தின் ஆசை!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஸ்ரீசாந்த். கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆடியபோது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுக்கப்பட்டார். இருப்பினும் ஸ்ரீசாந்த்துக்கு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட பி.சி.சி.ஐ வாழ்நாள் தடை விதித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தால் பி.சி.சி.ஐ-யின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின், ஸ்ரீசாந்த்தின் வாழ்நாள் தடையை 7 ஆண்டுகளாகக் குறைத்துள்ளார். 2013ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் விடுவிக்கப்பட்ட ஸ்ரீசாந்த், அடுத்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதிக்கு பிறகு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஸ்ரீசாந்த், 'கடவுள் ஆசிர்வாதத்தால் எனது தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது. தண்டனைக் காலம் முடிந்தவுடன் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன் என எதிர்பார்க்கிறேன். நான் இதுவரை 87 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன், 100 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பது எனது கனவு. இந்திய டெஸ்ட் அணிக்கு நான் திரும்ப முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. விராட் கோலி தலைமையின் கீழ் ஆட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீசாந்த் கடைசியாக 2011ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் விமர்சனம்!