Sports
இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என வந்த அதிர்ச்சி இ-மெயில் - டெஸ்ட் தொடர் ரத்தாகும் வாய்ப்பு!
மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 தொடரை கைப்பற்றிய கையோடு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வென்றது. அடுத்ததாக டெஸ்ட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்கு முன்னதாக மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள இந்திய அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இ-மெயில் வந்துள்ளது. அதில் மேற்கிந்திய தீவுகள் நாட்டில் உள்ள இந்திய அணியின் மீது தாக்குதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்த மின்னஞ்சலை ஐ.சி.சி-க்கு அனுப்பியுள்ளது. பின்னர் அந்த மின்னஞ்சல் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் கிடைத்துள்ளது.
இந்த விவகாரம் மத்திய அரசின் காதுக்குச் செல்ல, வெளியுறவு அமைச்சகம் மூலம் ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு இந்திய வீரர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள இந்திய அணி வீரர்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்திய வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ரத்து செய்யவும், வாய்ப்புள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!