Sports
இன்ஸ்டாகிராம் தெருவுக்கு வந்த ரோஹித் - கோலி சண்டை : முற்றுகிறதா பனிப்போர் ?
உலகக்கோப்பையை நிச்சயம் இந்தியாதான் வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்தியாவின் உலகக்கோப்பை பயணம் முடிவுக்கு வந்த சில நாட்களிலேயே, இந்திய அணிக்குள் பிளவு இருப்பதாகத் செய்திகள் வெளியாகின.
அதில், ரோஹித்தின் யோசனைகளை விராட் கோலி கேட்கவில்லை என்றும், இந்திய கிரிக்கெட் அணியில் கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும் ரோஹித்துக்கு ஆதரவாக சில வீரர்களும் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் இந்திய அணியின் கேப்டன்சியை ரோஹித் சர்மாவிடம் வழங்க பி.சி.சி.ஐ ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியானது.
இன்னும் கோலி - ரோகித் இடையே பனிப்போர் நிலவி வருவதை நிரூபிக்கும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டார். இந்தச் செய்தி நெட்டிசன்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை அன்ஃபாலோ செய்து இருந்தார் ரோஹித் சர்மா. ஆனால், இன்னும் விராட் கோலி ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரோஹித்தை பாலோ செய்து வருகிறார்.
அவர்கள் இருவரிடையே பிரச்னை இல்லை என்று கூறப்பட்டு வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு யூகங்களுக்கும் வழிவகுத்துள்ளன. எனவே, இருவர் மத்தியிலிருக்கும் மவுனம் கலைய பி.சி.சி.ஐ நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!