Sports
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு - எதிர்பார்க்காத பல புதிய வீரர்கள் உள்ளே ?
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அப்போது, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள், மூன்று T20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இத்தொடருக்கான வீரர்கள், எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது. அணியில் நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். அதேபோல இந்திய அணி0யின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் கீப்பர் எம்.எஸ்.தோனி ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடவில்லை என்பதால் அவருக்கு பதில் ரிசப் பண்ட் கீப்பராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய 'ஏ' அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அப்போட்டிகளில் நன்றாக ஆடி வரும் ஷ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, நவ்தீப் சைனி ஆகியோர் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான அணிகளில் இடம்பெற்றுள்ளனர்.
மூன்று விதமான போட்டிகளுக்குமான இந்திய அணி கீழ்வருமாறு,
T20 : விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிசப் பந்த், க்ருனால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர், கலீல் அகமது, நவ்தீப் சைனி.
ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து விஜய் சங்கர், ஹர்டிக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு ஷ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, கலீல் அகமது, நவ்தீப் சைனி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒருநாள் போட்டிகள் : விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிசப் பந்த், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யூசுவேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், மொஹம்மது சமி, கலீல் அகமது, நவ்தீப் சைனி.
டெஸ்ட் போட்டியில் காயத்திலிருந்து மீண்டு வந்த விரித்திமான் சஹா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டி : விராட் கோலி (கேப்டன்) , அஜிங்க்ய ரஹானே, கே.எல்.ராகுல், மயங் அகர்வால்,ஹனுமா விகாரி, ரோஹித் சர்மா, ரிசப் பந்த், விரித்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹம்மது சமி, ஜஸ்பிரிட் பும்ரா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !