Sports

உலகக்கோப்பை 2019 : பயிற்சியில் விராட் கோலிக்கு காயம் - அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள் !

உலகக்கோப்பை தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஜூன் 5ம் தேதி சவுதாம்ப்டனில் எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி நேற்று வலைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது கேப்டன் விராட் கோலிக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனே இந்திய பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபேர்ஹார்ட்டை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டார். விராட் கோலி பயிற்சியிலிருந்து ஓய்வறைக்கு சென்று விட்டார். இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் 9 தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்க உள்ள காரணத்தால் இந்திய அணி நிர்வாகம் அனைத்து வீரர்களின் உடல் தகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ஜீன் 5 அன்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிக்கு முன்பாகவே விராட் கோலி குணமடைந்து விடுவார் என எதிர்பார்க்க படுகிறது. அவருடைய காயம் குறித்த எந்த தகவலும் இதுவரை அணி நிர்வாகம் சார்பாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஜூன் 5ம் தேதிக்குள் விராட் கோலி குணமடையா விட்டால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடும் நெருக்கடிக்கு உள்ளாகும். இந்திய ரசிகர்களால் ரன் மெஷின் என அழைக்கப்படும் கோலி கடந்த சில ஆண்டுகளாக ஒரு நாள் போட்டிகளில் அற்புதமாகச் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில்தான் தற்போது இந்திய அணி உலகக் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ளது.

இந்திய உலகக்கோப்பை தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் எதிர்கொள்ளவிருக்கும் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்திடம் மோசமான தோல்வியை தழுவியது.