Sports
இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை !
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகளில் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 3-வது ஒருநாள் போட்டி பிரிஸ்டோலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. அந்த அணி 358 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் பேட்டிங் செய்யும் போது இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியிருந்தனர். இதனை போட்டி நடுவர்கள் சுட்டிக்காட்டி இங்கிலாந்து கேப்டன் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தனர். அத்துடன் 40 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சக வீரர்களுக்கு தலா 10 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே , மோர்கன் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் இதேபோன்று குறிப்பிட்ட நேரத்திற்குள் சில ஓவர்கள் குறைவாக வீசியிருந்தனர். ஒரு வருடத்திற்குள் இரண்டு முறை இப்படி நடந்தால் ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படும். அதன் அடிப்படையில் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை நாட்டிங்காமில் நடைபெறும் 4-வது போட்டியில் மோர்கன் விளையாடமாட்டார்.
Also Read
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!